செய்திகள்

குல்தீப் அசத்தல்: 157-க்கு சுருண்ட நியூஸி.

இந்தியா, நியூஸிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஆட்டம் நேப்பியரில் புதன்கிழமை நடைபெறுகிறது.

Raghavendran

இந்தியா, நியூஸிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஆட்டம் நேப்பியரில் புதன்கிழமை நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 38 ஓவர்களில் 157 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 64 ரன்கள் சேர்த்தார். 

இந்திய தரப்பில் அற்புதமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது ஷமி 3, சாஹல் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். கேதர் ஜாதவ் 1 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, உணவு இடைவேளை வரை 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 11 ரன்களுடனும், தவன் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT