முகப்பு
செய்திகள்

மகளிர் டி20 உலகக்கோப்பை: மகளிர் தினத்தன்று நடைபெறவுள்ள இறுதிச்சுற்று ஆட்டம்!

முதல் நாளன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன... 

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:00 AM
பகிர்:

2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஆடவர் மற்றும் மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான அட்டவணைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 

மகளிர் டி20 உலகக் கோப்பை, 2020-ம் ஆண்டு பிப்ரவரி 21 முதல் தொடங்குகிறது. சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று இறுதிச்சுற்று ஆட்டம்  நடைபெறவுள்ளது. முதல் நாளன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன. சிட்னி, கேன்பெரா, பெர்த், மெல்போர்ன் ஆகிய நகரங்களில் மகளிர் டி20 உலகக் கோப்பை ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

அரையிறுதி ஆட்டங்கள் மார்ச் 5 அன்று நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் மார்ச் 8 அன்று நடைபெறவுள்ளது. 

2020 மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் ஆட்டங்கள்

பிப்ரவரி 21: இந்தியா vs ஆஸ்திரேலியா
பிப்ரவரி 24: இந்தியா vs தகுதி பெறும் அணி 1
பிப்ரவரி 27: இந்தியா vs நியூஸிலாந்து
பிப்ரவரி 29: இந்தியா vs இலங்கை

மகளிர் டி20 உலகக் கோப்பை - சாம்பியன்கள்

2009 - இங்கிலாந்து
2010 - ஆஸ்திரேலியா
2012 - ஆஸ்திரேலியா
2014 - ஆஸ்திரேலியா
2016 - மேற்கிந்தியத் தீவுகள்
2018 - ஆஸ்திரேலியா

முழு கட்டுரையைப் படிக்க →