முகப்பு
செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: நியூஸிலாந்து அணி அறிவிப்பு

நியூஸி. டி20 அணியிலிருந்து ஜேம்ஸ் நீஷம், ஹென்றி நிகோல்ஸ், கிளென் பிளிப்ஸ், சேத் ரேன்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:00 AM
பகிர்:

இந்தியாவுக்கு எதிராக நியூஸிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல், வேகப்பந்துவீச்சாளர் பிளைர் டிக்னர் ஆகிய இரு புதுமுகங்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். டிக்னர் 3-வது டி20-க்கு மட்டும் ஃபெர்குசனுக்குப் பதிலாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக விளையாடிய நியூஸி. டி20 அணியிலிருந்து ஜேம்ஸ் நீஷம், ஹென்றி நிகோல்ஸ், கிளென் பிளிப்ஸ், சேத் ரேன்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள். டிரெண்ட் போல்டுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

பிப்ரவரி 6 முதல் 10 வரை டி20 தொடர் நடைபெறவுள்ளது.

நியூஸிலாந்து அணி: கேன் வில்லியம்சன், டொக் பிரேஸ்வெல், காலின் டி கிராண்ட்ஹோம், ஃபெர்குசன், மார்டின் கப்தில், ஸ்காட், டேரில் மிட்செல், காலின் மன்ரோ, மிட்செல் சாண்ட்னர், டிம் செய்ஃபெர்ட் (விக்கெட் கீப்பர்), இஷ் சோதி, டிம் செளதி, ராஸ் டெய்லர், பிளைர் டிக்னர்.

முழு கட்டுரையைப் படிக்க →