செய்திகள்

சன்ரைசர்ஸ் ஐபிஎல் அணியின் பயிற்சியாளர் ஆனார் டிரெவர் பேலிஸ்!

பேலிஸிடம் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்...

எழில்

இது நிச்சயம் திருப்புமுனைதான். 

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக டிரெவர் பேலிஸின் பெயர் அடிபட்ட நிலையில் தற்போது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக டிரெவர் பேலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த  ஏழு வருடங்களாக சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த டாம் மூடிக்குப் பதிலாக பேலிஸ் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளவுள்ளார். 

டிரெவர் பேலிஸ், சமீபத்தில் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக உள்ளார். ஆஷஸ் தொடருக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக நீடிக்கப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார். 

2012 முதல் 2014 வரை கெளதம் கம்பீர் தலைமையில் கேகேஆர் அணி இருமுறை ஐபிஎல் போட்டியை வென்றபோது பேலிஸ், அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். தற்போது பேலிஸிடம் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கடைசியில் சன்ரைசர்ஸ் அணியுடன் அவர் இணைந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT