செய்திகள்

85 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து அணி; லார்ட்ஸ் டெஸ்டில் அசத்திய அயர்லாந்து: ஹைலைட்ஸ் விடியோ!

எழில்

அயர்லாந்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் அதிர்ச்சியளிக்கும் வகையில் 85 ரன்களுக்கு சுருண்டது. 

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கிய நான்கு நாள் டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட் செய்யத் தீர்மானித்தது. அடுத்தடுத்த விக்கெட் சரிவால் 23.4 ஓவர்களில் 85 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து. அயர்லாந்து தரப்பில் டிம் முர்டாக் 13 ரன்களே கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார். மார்க் அடைர் 3, பாய்ட் ரான்கின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய அயர்லாந்து 58.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆன்டி பால்பிர்னி 10 பவுண்டரிகள் உள்பட 55 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட், ஆலி ஸ்டோன், சாம் கரன் தலா 3 விக்கெட்டுகளும், மொயீன் அலி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி ரன்கள் எதுவும் எடுக்கவில்லை.

தற்போதைய நிலையில் அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் 122 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் இந்த டெஸ்டை அந்த அணி வெல்லும் நிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT