செய்திகள்

பயிற்சியாளராகத் தொடர்கிறார் ரவி சாஸ்திரி?: சூசகமாகத் தெரிவித்த ஆலோசனைக் குழு உறுப்பினர்

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளரை, கபில் தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) தேர்வு செய்யவுள்ளது... 

எழில்

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளரை, கபில் தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) தேர்வு செய்யவுள்ளது. 

ஜூலை 16 அன்று, தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட ஏழு பதவிகளுக்கு விண்ணப்பங்களைக் கோரியது பிசிசிஐ. தலைமைப் பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சுப் பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர், பிஸியோதரபிஸ்ட், ஸ்டிரந்த் அண்ட் கண்டிங்ஷனிங் பயிற்சியாளர், நிர்வாக மேலாளர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன. 

ரவி சாஸ்திரி உள்ளிட்ட இந்திய அணியின் பயிற்சியாளர்கள், நிர்வாகிகளின் பதவிக்காலம் மேற்கிந்தியத் தீவுகள் தொடருடன் முடிவடையவுள்ளது. உலகக் கோப்பைக்குப் பிறகு 45 நாள்கள் நீடிப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் தொடர் ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெறவுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்குப் பிறகு இந்தியாவின் உள்ளூர் சீஸன் செப்டம்பர் 15 முதல் தொடங்குகிறது. உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் டிரெய்னர் சங்கர் பாசு மற்றும் பிஸியோதரபிஸ்ட் பாட்ரிக் ஃபர்ஹட்ஆகியோர் தங்கள் பதவியிலிருந்து விலகியுள்ளார்கள். மேலே குறிப்பிட்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் அனுப்பக் கடைசித் தேதி - ஜூலை 30. 

கபில் தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் மகளிரணி முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி, ஆடவரணி முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட் ஆகியோரும் உறுப்பினர்களாக உள்ளனர். 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது. அன்ஷுமன் கெய்க்வாட் ஒரு பேட்டியில் கூறியதாவது: இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றிகளின் அடிப்படையில் பார்த்தால் ரவி சாஸ்திரி தன் பணியை நன்கு செய்துள்ளார். எனவே என்னைப் பொறுத்தவரை ரவி சாஸ்திரியின் பதவியைத் தவிர இதர பணிகளுக்கான நபர்களைத் தேர்வு செய்யவேண்டியுள்ளது என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"பராசக்தி" படப்பிடிப்பு நிறைவு! கொண்டாடிய படக்குழு! | SK | Sudha Kongara

ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

குறைந்த வட்டி, உடனடி கடன்! Online Scam-ல் மாட்டிக்காதீங்க! | Cyber Scams | Online Shield

கர்பா குயின்... அனன்யா!

மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸி. பந்துவீச்சு!

SCROLL FOR NEXT