முகப்பு
செய்திகள்

முதலில் யுவராஜ் அழுதபோது அதை என்னால் உணர முடியவில்லை: ஹாசில் கீச்

முதலில் தனது கணவர் அழுதபோது அதை தன்னால் உணர முடியவில்லை என்று அவரது மனைவி ஹாசில் கீச் தெரிவித்தார். 

Updated On : 11 ஜூன், 2019 at 2:24 PM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:38 PM

யுவராஜ் சிங் ஓய்வு அறிவிப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரது மனைவி ஹாசில் கீச், முதலில் தனது கணவர் அழுதபோது அதை தன்னால் உணர முடியவில்லை என்று தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

கிரிக்கெட்டில் இருந்து எனது கணவர் ஓய்வு பெறுவது தொடர்பான முடிவில் ஒரு மனைவியாக என்னால் தலையிட முடியாது. அவருடைய இந்த முடிவில் எனது முழு ஆதரவு உண்டு. மேலும் புற்றுநோய் விவகாரத்தில் யுவராஜை அனைவரும் போராடி வெற்றி பெற்றவராக முத்திரை குத்திவிட்டனர்.

யாராலும் எந்த நோயில் இருந்தும் மீண்டு, குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். எனவே அதுபோன்ற கடின வாழ்க்கையை வாழும் அனைவரும் போராளி என்று மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதை அவர்களால் எளிதில் தூக்கி வீச முடியாது. யுவராஜுக்கு அதுபோன்ற ஒரு நினைப்பு என்றுமே இருந்ததில்லை.

Advertisement

நான் யுவராஜ் சிங்கை சந்திப்பதற்கு முன் எனக்கு கிரிக்கெட் விளையாட்டு குறித்து எதுவும் தெரியாது. ஆனால், 2014-ல் இந்திய அணியின் ஜெர்ஸி அடங்கிய கிரிக்கெட் உபகரணங்கள் வந்தபோது அதனைக் கண்டு யுவராஜ் அழுதார். அப்போது அவரின் உணர்வை என்னால் உணர முடியவில்லை. 

ஏனென்றால் தேசிய அணியில் இடம்பெறும் போது ஏற்படும் அந்த உணர்வை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரரால் மட்டுமே உணர முடியும் என்று தெரிவித்தார்.

இந்திய அணி முக்கிய கோப்பைகளை வெல்ல எனது மகன் காரணமாக இருந்தார். தனது கிரிக்கெட் வாழ்வில் யுவராஜ் இந்திய அணியை பெருமைப்பட வைத்துள்ளார். சிறந்த கிரிக்கெட் வீரராக திகழந்துள்ளார். ஓய்வு என்பது தனிப்பட்ட முடிவு. ஒரு தாயாக என்னால் யுவராஜின் பின்னிருந்து தட்டிக்கொடுக்க மட்டும்தான் முடியும் என்று அவரது தாயார் ஷப்னம் சிங் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.