செய்திகள்

2 ப்ளேட் பிரியாணியும் - 5 ஆலு பரோட்டாவும்! சாரல் மழைக்கு தேநீரும் - பக்கோடாவும்!

சர்ஃப்ராஸ் அகமது மைதானத்திலேயே கொட்டாவி விட்ட சம்பவம் நெட்டிசன்களால் கேலி, கிண்டலுக்குள்ளாகி வருகிறது.

Raghavendran

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது மைதானத்திலேயே கொட்டாவி விட்ட சம்பவம் நெட்டிசன்களால் கேலி, கிண்டலுக்குள்ளாகி வருகிறது.

உலகக் கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா எளிதில் வீழ்த்தியது. மேலும் உலகக் கோப்பை ஆட்டங்களில் 7-0 என தனது ஆதிக்கத்தையும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், போட்டியின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது மைதானத்திலேயே கொட்டாவி விட்ட விடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலானது. அதற்கு,

இந்த போட்டியில் சர்ஃப்ராஸின் ஈடுபாடு அவ்வளவுதான், சர்ஃப்ராஸ் ஒவ்வொரு முறை கொட்டாவி விடும்போதும் ரோஹித்தும், கோலியும் ஒரு பவுண்டரி அடிக்கிறார்கள், இந்தப் போட்டியின் முடிவு தெரிந்தே கடமைக்காக சர்ஃப்ராஸ் விளையாடுகிறார், போராடாமல் இந்தியாவுடனான போட்டியை சர்ஃப்ராஸ் விட்டுக்கொடுத்துவிட்டார், சர்ஃப்ராஸ் விட்ட கொட்டாவியால் வெறுப்பேறி தான் விராட் கோலி அவுட் இல்லை என்று தெரிந்தும் மைதானத்தை விட்டு வெளியேறினார், சர்ஃப்ராஸின் இந்த சோம்பேறித்தனம் ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணிக்கும் பரவியுள்ளது என்று சகட்டுமேனிக்கு ட்வீ(தி)ட்டித் தீர்த்தனர்.

குறிப்பாக, சாரல் மழைக்கு சுடச்சுட தேநீரும், பக்கோடாவும் தேவைப்படுகிறது, 2 பிளேட் பிரியாணியும், 5 ஆலு பரோட்டாவும் ஒரேயடியாக சாப்பிட்டால் இப்படித்தான், மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் நானும் அலுவலகத்தில் இப்படித்தான் தூங்கி வழிவேன் என்பது போன்ற அதகளக் கேலி மற்றும் கிண்டல்களுக்கும் பஞ்சமில்லை.

இவற்றில் சர்ஃப்ராஸை வசைபாடி வெளியான ட்வீட்டுகள் பெரும்பாலும் பாகிஸ்தான் ரசிகர்களிடமிருந்து என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

பெலாரஸ் பறவை... ஸ்ரவந்திகா!

SCROLL FOR NEXT