செய்திகள்

பிஃபா மகளிர் உலகக் கோப்பை: காலிறுதியில் இங்கிலாந்து, பிரான்ஸ்

DIN


பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ரவுண்ட் 16 சுற்றில் இங்கிலாந்து, பிரான்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
வலேன்சியன்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வலுவான இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் கேமரூன் அணியை வீழ்த்தியது. ஹெளட்டன், வொயிட், கிரீன்வுட்  ஆகியோர் கோலடித்தனர். வரும் வியாழக்கிழமை காலிறுதியில் நார்வேயுடன் மோதுகிறது இங்கிலாந்து. லீ ஹார்வேயில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வென்றது. கெளவின், ஹென்றி ஆகியோர் பிரான்ஸ் அணி தரப்பிலும், தைஸா பிரேசில் தரப்பிலும் கோலடித்தனர். கூடுதல் நேரத்தின் இரண்டாம் பகுதியில் த்ரில் வெற்றி பெற்ற பிரான்ஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT