செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான சாதனையை தக்க வைத்த ஆஸி., சாதிக்குமா இந்தியா?

கடந்த 1992 உலகக் கோப்பையில் இருந்து தற்போது வரையிலான உலகக் கோப்பை ஆட்டங்களில் இங்கிலாந்து...

Raghavendran

2019 உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மேதின. இதில் 64 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. 

இதன்மூலம் கடந்த 1992 உலகக் கோப்பையில் இருந்து தற்போது வரையிலான உலகக் கோப்பை ஆட்டங்களில் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் வெற்றிச் சாதனையை தக்க வைத்துக்கொண்டது. 

உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியை அதிக முறை வீழ்த்தியுள்ள அணிகளின் விவரம் பின்வருமாறு:

  • ஆஸ்திரேலியா - 6 முறை
  • நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை - 5 முறை
  • இந்தியா, தென் ஆப்பிரிக்கா - 3 முறை

இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 30) நடைபெறவுள்ளது. அரையிறுதிக்கான போட்டி அதிகரித்துள்ள இந்த வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

குறிப்பாக கடந்த சில போட்டிகளாக தோல்வியை சந்தித்து வரும் இங்கிலாந்து, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இந்தியாவுடனான போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே விறுவிறுப்பான போட்டியை எதிர்நோக்கி கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT