செய்திகள்

விம்பிள்டன்: ராம்குமார் வெளியேற்றம்

DIN


இந்திய டென்னிஸ் வீரர் ராம்குமார் ராமநாதன், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். 
ராம்குமார் தனது தகுதிச்சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் போலாந்தின் காமில் மஜ்செர்ஸாக்கை எதிர்கொண்டார். போட்டித் தரவரிசையில் 11-ஆவது இடத்தில் இருப்பவரும், உலகின் 111-ஆம் நிலை வீரருமான காமில், 7-6(7/5), 6-3 என்ற செட்களில் ராம்குமாரை வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம், 19 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. 
உலகின் 154-ஆம் நிலை வீரரான ராம்குமார், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் பிரதான சுற்றுக்கு முன்னேற முயன்று வருகிறார். அதிகபட்சமாக, கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் தகுதிச்சுற்றின் கடைசி ஆட்டம் வரை முன்னேறி தோல்வி கண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT