செய்திகள்

உலகக் கோப்பைக்கு 4-ம் நிலை வீரராக இவரைத் தேர்வு செய்யுங்கள்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விருப்பம்!

எழில்

கிரிக்கெட் உலகின் பெரிய போட்டியாக உள்ளது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை. கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி மே மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை நடக்கிறது.  இதில் மொத்தம் 10 அணிகள் குரூப் பிரிவில் ரவுண்ட் ராபின் முறை ஆட்டங்களில் பங்கேற்கும். முதல் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். ஜூலை 14-இல் இறுதி ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் 4-ம் நிலை வீரராக யார் களமிறங்குவார் என்கிற குழப்பம் இன்னும் நீடிக்கிறது. சமீபகாலமாக ராயுடு 4-ம் நிலை வீரராகப் பல ஆட்டங்களில் விளையாடினாலும் அவருடைய இடம் இந்திய அணியில் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. தோனி, ராகுல் அல்லது விஜய் சங்கர் ஆகிய மூவரில் ஒருவர் 4-ம் நிலை வீரராகக் களமிறங்கவேண்டும் என்று பலர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். இந்த விவகாரம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது:

சிக்ஸ் அடிப்பதாலும் சிங்கிள் ரன் அடித்து பந்தை வீணாக்காமல் இருப்பதாலும் விஜய் சங்கரே 4-ம் நிலைக்கான என்னுடைய தேர்வு. அவரை ஒரு பேட்ஸ்மேனாக அணியில் தேர்வு செய்யுங்கள். பந்துவீச்சாளராக அவரால் மூன்று ஓவர்கள் வீசமுடியும். 7 அல்லது முழு ஓவர்களையும் வீசக்கூடிய வீரர் அல்லர் அவர். வெல்லிங்டனில் நியூஸிலாந்துக்கு எதிராக ராயுடு 90 ரன்கள் எடுத்தபோது அவர் தன்னுடைய இடத்தைப் பற்றிக்கொண்டார் என நினைத்தேன். ஆனால் அடுத்த மூன்று ஆட்டங்களில் குறைந்த ரன்கள் எடுத்தார். விஜய் சங்கரின் வளர்ச்சியும் சேர்ந்து அவருடைடைய இடத்தைக் கேள்விக்குறிக்கியாக்கிவிட்டன என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

SCROLL FOR NEXT