செய்திகள்

பெங்களூருவை நொறுக்கியது சென்னை

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பெங்களூரு அணி 70 ரன்களுக்கு சுருண்டது. ஹர்பஜன், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பெங்களுருவை நிலைகுலையச் செய்தனர். பின்னர் ஆடிய சென்னை அணி 71 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஐபிஎல் 2019  (12-ஆவது சீசன்) முதல் ஆட்டம் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களுரு இடையே சனிக்கிழமை இரவு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்களால் சென்னை சுழற்பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிரின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. 17.1 ஓவர்களிலேயே 70 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பெங்களூரு. பார்த்திவ் பட்டேல் மட்டுமே அதிகபட்சமாக 29 ரன்களை சேர்த்தார். கேப்டன் கோலி உள்பட 9 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.
ஹர்பஜன் சிங் 3-20, தாஹிர் 3-9 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 71 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி அம்பதி ராயுடு-சுரேஷ் ரெய்னா ஆகியோரின் நிதானமான ஆட்டத்தில் வெற்றி பெற்றது. அம்பதி ராயுடு 28 ரன்களுடனும், ரெய்னா 19 ரன்களையும் எடுத்தனர். 17.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 71 ரன்களுடன் வெற்றி பெற்றது சென்னை. இந்த வெற்றி மூலம் 2 புள்ளிகளையும் ஈட்டியது.
ஹர்பஜன் சிங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2014-இலும் சென்னைக்கு எதிராக பெங்களூரு அணி 70 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. சொந்த மைதானத்தில் தான் புலி என்பதை மீண்டும் நிரூபித்தது சென்னை.
ரெய்னா 5000 ரன்கள் சாதனை:ஐபிஎல் போட்டிகளிலேயே முதன்முறையாக 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா படைத்தார். மொத்தம் 4985 ரன்களை எடுத்திருந்த அவர், இந்த ஆட்டத்தில் 19 ரன்களை குவித்த போது, 5000 ரன்கள் சாதனையை நிகழ்த்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT