கோல் கீப்பர் சவிதா தலைமையிலான 18 வீராங்கனைகள் கொண்ட மகளிர் ஹாக்கி அணி, ஏப்ரல் 4ஆம் தேதி மலேசியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இதுதொடர்பாக ஹாக்கி இந்தியா நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கேப்டன் ராணி ராம்பால் காயம் காரணமாக அவதியுற்று வருவதால் அவருக்கு பதிலாக சவிதா கேப்டனாக செயல்படுவார். தீப் கிரேஸ் எக்கா துணை கேப்டனாக செயல்படுவார்.
8 நாள் பயணமாக மலேசியாவின் கோலாலம்பூருக்கு இந்திய ஹாக்கி அணி ஏப்ரல் 4ஆம் தேதி பயணம் மேற்கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதி, வந்தனா கடாரியா, லால்ரேம்சியாமி, நவ்ஜோத் கௌர், நவ்நீத் கௌர், குர்ஜித் கௌர், நமிதா டோப்போ உள்ளிட்ட வீராங்கனைகள் 18 பேர் கொண்ட ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.