முகப்பு
செய்திகள்

மே.இ. அணியின் துணை கேப்டனாக கிறிஸ் கெயில் நியமனம்!

தனது கடைசி உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கவுள்ள கிறிஸ் கெயில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:51 AM
பகிர்:

தனது கடைசி உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கவுள்ள கிறிஸ் கெயில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அயர்லாந்து, வங்கதேசத் தொடர்களுக்கான துணை கேப்டனாக ஷாய் ஹோப் நியமிக்கப்பட்டுள்ளார். 

உலகக் கோப்பைக்கான மே.இ. அணியில் மூத்த வீரராக உள்ளார் கெயில். இதுவரை அவர் 289 ஒருநாள் ஆட்டங்களில் இடம்பெற்று 10,151 ரன்கள் எடுத்துள்ளார். 

உலகக் கோப்பைக்கான மே.இ. அணி: ஜேஸன் ஹோல்டர் (கேப்டன்), ஃபெபியன் ஆலன், டேரன் பிராவோ, கார்லஸ் பிராத்வெயிட், ஷெல்டன் காட்ரெல், ஷன்னோன் கேப்ரியல், கிறிஸ் கெயில், ஹெட்மையர், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், ஆஷ்லி நர்ஸ், நிகோலஸ் பூரண், கெமர் ரோச், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஒஷானே தாமஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.