செய்திகள்

உலகக் கோப்பை: ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் விலகல்!

உலகக் கோப்பைப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் விலகியுள்ளார்.

எழில்

உலகக் கோப்பைப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் விலகியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதுவரை விளையாடிய 12 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

இந்நிலையில் ஜை ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் ஆஸி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸி. அணி: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், நாதன் கோல்டர் நைல், ஜேஸன் பெஹ்ரென்டார்ஃப், ஆடம் ஸாம்பா, நாதன் லயன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT