செய்திகள்

சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வாட்சன் வெளியிட்ட விடியோ

Raghavendran

2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்புடன் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்று 4-ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் தனியொருவனாகப் போராடிய ஷேன் வாட்சன், 59 பந்துகளில் 8 பவுண்டரி 4 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் விளாசினார். 

இந்நிலையில், காலில் ஏற்பட்ட காயத்துடன் ஷேன் வாட்சன் ஆடியதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்தார். 

அதில், வாட்சனின் கால் பகுதியில் மிகப்பெரிய அளவிலான ரத்தக்கசிவு இருப்பது பதிவாகியுள்ளது.

தன்னுடைய காயத்தையும் மறைத்து அணிக்காக வாட்சன் போராடியதாகவும், போட்டிக்கு பிறகு அவரது காலில் 6 தையல்கள் வரை போடப்பட்டதாகவும் ஹர்பஜன் சிங் புகழாரம் சூட்டினார். 

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் 'நீ'ங்க வேற லெவல்! வீ லவ் யூ வாட்சன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் வாட்சனை கொண்டாடி வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல் வாட்சனின் அர்ப்பணிப்பு தான் நமக்கு கிடைத்த மகுடம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பாராட்டியுள்ளது. 

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஷேன் வாட்சன் விடியோ வெளியிட்டுள்ளார். அதில், எனக்கு ஆதரவும், அன்பும், வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துகொள்கிறேன். 

மும்பையுடனான ஐபிஎல் இறுதிப்போட்டி மிகவும் சிறப்பாக அமைந்தது. நாங்கள் இறுதிவரைப் போராடினோம். அடுத்த முறை நிச்சயம் கோப்பையை வெல்வோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேஸ்பாலாக மாறிவரும் கிரிக்கெட்: சாம் கரண் நெகிழ்ச்சி!

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT