செய்திகள்

தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்கள் அடிக்கத் திட்டமிட்டேன்: ரோஹித் சர்மா பேட்டி

எழில்

2017, 2018-ம் ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் ரோஹித் சர்மா. 2017-ல் 65 சிக்ஸர்களும் 2018-ல் 74 சிக்ஸர்களும் அடித்துச் சாதனை செய்துள்ளார். அதேபோல இந்த வருடமும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் ரோஹித் சர்மா. இந்த வருடம் 66 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். 

ராஜ்கோட்டில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா சிக்ஸர்கள், பவுண்டரிகளாக விளாசி 85 ரன்களை எடுத்தார். முதலில் ஆடிய வங்கதேசம் 153/6 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 154/2 ரன்களை எடுத்து வென்றது. 

இந்நிலையில், பிசிசிஐக்காக சுழற்பந்துவீச்சாளர் சஹாலுக்கு ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்கள் அடித்தபோது, ஆறு சிக்ஸர்களை அடிக்க எண்ணினேன். ஆனால் நான்காவது சிக்ஸரைத் தவற விட்ட பிறகு சிங்கிள்ஸ் எடுக்க முயன்றேன். மிகவும் பலசாலியாக இருந்துதான் சிக்ஸர் அடிக்க முடியும் என்பதில்லை. நீங்கள் (சஹால்) கூட சிக்ஸர் அடிக்கலாம். சிக்ஸ் அடிக்க பலம் மட்டுமே போதாது, சரியான டைமிங்கிலும் அடிக்கவேண்டும். தலை சரியான நிலையுடன் இருக்கவேண்டும். பந்து பேட்டின் நடுவில் பட வேண்டும். எனவே ஒரு சிக்ஸர் அடிக்க பல விஷயங்கள் தேவைப்படுகின்றன என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற நடத்துநா் வீட்டில் 35 பவுன் நகைகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் ஐஜி ஆய்வு

ராமன்தொட்டி கிராமத்தில் எருதுவிடும் விழா தொடங்கி வைப்பு

ஒசூரில் 8 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் பயிா் சாகுபடி

ரேஷன் அரிசி கடத்திய வழக்கு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

SCROLL FOR NEXT