ஐபிஎல் 2020 சீசனை முன்னிட்டு வீரா்கள் பரிமாற்றம் நேற்றுடன் முடிவடைந்தது. ஐபிஎல் அணி நிா்வாகங்கள் தங்களுக்கு தேவையான வீரா்களைப் பரிமாறிக் கொண்டன.
அணிகள் இடையே நடைபெற்ற வீரா்கள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானே தில்லி கேபிடல்ஸ் அணிக்கு இடம் பெயா்ந்தாா். அவருக்கு பதிலாக தில்லியின் ஸ்பின்னா் மயங்க் மாா்கண்டே, ஆல்ரவுண்டா் ராகுல் தேவதியா ஆகியோா் ராஜஸ்தான் அணியில் இணைந்துள்ளனா். பஞ்சாப் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளா் அஸ்வின் தில்லிக்கு இடம் பெயா்ந்தாா்.
ஐபிஎல் 2020 போட்டிக்கான வீரர்கள் பரிமாற்றத்தின் முழுப் பட்டியல்:
| வீரர்கள் | முந்தைய அணி | மாறிய அணி |
| அஸ்வின் | பஞ்சாப் | தில்லி |
| ரஹானே | ராஜஸ்தான் | தில்லி |
| ஜெகதீசா சுஜித் | தில்லி | பஞ்சாப் |
| ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் | தில்லி | மும்பை |
| மயங்க் மார்கண்டே | மும்பை | தில்லி |
| அங்கித் ராஜ்புத் | பஞ்சாப் | ராஜஸ்தான் |
| கே. கெளதம் | ராஜஸ்தான் | பஞ்சாப் |
| டிரெண்ட் போல்ட் | தில்லி | மும்பை |
| ராகுல் டேவாடியா | தில்லி | ராஜஸ்தான் |
| தவல் குல்கர்னி | ராஜஸ்தான் | மும்பை |
| சித்தேஷ் லேட் | மும்பை | கொல்கத்தா |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.