முகப்பு
செய்திகள்

மே.இ. தீவுகள் தொடர்: ஷிகர் தவனுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் இந்திய அணியில் சேர்ப்பு

இந்திய டி20 அணியில் இடம்பெற்ற ஷிகர் தவன், காயம் காரணமாக இந்திய டி20 அணியிலிருந்து விலகியுள்ளார்.

Updated On : 27 நவம்பர், 2019 at 12:57 PM
பகிர்:

இந்தியாவில் மே.இ.தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒரு நாள் தொடா்களில் பங்கேற்கிறது. இந்தத் தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய டி20 அணியில் இடம்பெற்ற ஷிகர் தவன், காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

மேலும், கொல்கத்தாவில் நடைபெற்ற பகலிரவு டெஸ்டில் விக்கெட் கீப்பர் சஹாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கை விரவில் அவருக்கு எலும்புமுறிவு ஏற்பட்டதால் அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். மும்பையில் அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றதாக பிசிசிஐ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.