முகப்பு
செய்திகள்

சென்னையின் எஃப்.சி. தலைமைப் பயிற்சியாளர் ஜான் கிரெகோரி நீக்கம்!

தலைமைப் பயிற்சியாளர் ஜான் கிரெகோரியை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது சென்னையின் எஃப்.சி. அணி நிர்வாகம்.

Updated On : 30 நவம்பர், 2019 at 11:30 AM
பகிர்:

தலைமைப் பயிற்சியாளர் ஜான் கிரெகோரியை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது சென்னையின் எஃப்.சி. அணி நிர்வாகம்.

இந்தியக் கால்பந்தில் முக்கிய போட்டியான ஐஎஸ்எல் லீகில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றது சென்னையின் எஃப்.சி. அணி. எனினும் சென்னை அணியால் கடந்த 2018 சீசனில் நடப்பு சாம்பியனாக களமிறங்கி முடிவில் கடைசி இடத்தையே பெற முடிந்தது. இந்த வருடம், ஆறு ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 8-ம் இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் சென்னையின் எஃப்.சி. அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜான் கிரெகோரி நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Advertisement

அணி சரியான பாதையில் செல்வதற்காக இரு தரப்பும் பேசி இந்த முடிவை எடுத்துள்ளோம். ஜான், அணியைச் சிறப்பாக வழிநடத்தி 2-வது ஐஎஸ்எல் பட்டம் வெல்ல உதவினார். ஏஎஃப்சி கோப்பைக்குத் தகுதி பெற்ற முதல் ஐஎஸ்எல் அணி என்கிற பெருமையை அணிக்கு அளித்தார். ஜானின் அடுத்தக்கட்ட முயற்சிகளுக்கு எங்களுடைய வாழ்த்துகள்  என்று சென்னையின் எஃப்.சி. அணி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.