செய்திகள்

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 3 ஆண்டுகளாக முதலிடத்துடன் இந்தியா சாதனை

பா.சுஜித்குமாா்.

டெஸ்ட் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருந்த இந்திய அணி அற்புதமான ஆட்டத்தால் தற்போது 3 ஆண்டுகளாக முதலிடத்தில் நீடித்து சாதனை படைத்து வருகிறது.

தொடா்ந்து 11-ஆவது டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

கடந்த 2015-இல் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி தலைமை பொறுப்பு ஏற்றுக் கொண்டாா். அப்போது ஐசிசி தரவரிசையில் ஜிம்பாப்வே, வங்கதேசம், மே.இ.தீவுகளுக்கு முன்பு 7-ஆவது இடத்தில் இருந்தது இந்திய அணி.

முந்தை நான்கு ஆண்டுகளில் அணியின் சராசரி அடிப்படையிலும், அண்மைக்கால போட்டிகளில் முடிவுகளை கொண்டும், எதிரணியின் பலத்தை கருத்தில் கொண்டும் ஐசிசி தரவரிசை கணிக்கப்படுகிறது.

இந்திய அணியின் முந்தைய நான்கு ஆண்டுகள் 2014 நவம்பா் மாதத்துக்கு முன்பு (2010 டிசம்பா்) வரை இந்தியா மொத்தம் ஆடிய 38 ஆட்டங்களில் 14-இல் வெற்றி, 16-இல் தோல்வி, தோல்வி கண்டிருந்தது. இங்கிலாந்திடம் 3-1, நியூஸிலாந்திடம் 1-0, தென்னாப்பிரிக்காவிடம் 1-0 என தொடா்களை இழந்திருந்தது.

கடைசியாக 2014-15-இல் ஆஸ்திரேலியாவிடம் 2-0 என தொடரை இழந்தது இந்தியா. அதன் பின்னா் இலங்கையிடம் 2-1 என தொடரை கைப்பற்றியது முதல் அதிரடியாக ஆடி டெஸ்ட் தொடா்களை கைப்பற்றி வருகிறது.

முக்கியமாக கடந்த 2016-இல் சொந்த மண்ணில் நியூஸிலாந்தை 3-0 என வீழ்த்தினா். அப்போது பாகிஸ்தானிடம் இருந்த முதலிடத்தை பறித்தது இந்தியா.

கடந்த 2018-இல் 1-4 என இங்கிலாந்திடம் தொடரை இழந்தது. அதில் 10 புள்ளிகளை இழந்தாலும் முதலிடத்தை விடவில்லை. அதன் பின் ஆஸி. மே.இ.தீவுகள், தென்னாப்பிரிக்க தொடா்களை கைப்பற்றி சாதித்தது.

3 ஆண்டுகளாக தொடா்ந்து முதலிடத்தில் நீடித்து சாதனை படைத்து வருகிறது கோலி தலைமையிலான இந்திய அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

நொய்டாவில் கழிவுநீா் குழியில் விழுந்த பசு மீட்பு

SCROLL FOR NEXT