செய்திகள்

டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள இரு ஆஸி. வீரர்கள்!

ஆஷஸ் தொடருக்கு முன்பு, 857 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் அவர் இருந்தார்.... 

எழில்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அவ்வப்போது டி20, ஒருநாள், டெஸ்ட் தரவரிசை பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. இதன்படி இன்று வெளியிடப்பட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸி. மூத்த வீரர் ஸ்டீவ் ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 5-ஆவது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-2 என தொடரையும் சமன் செய்தது இங்கிலாந்து. இந்த ஆஷஸ் தொடரில் 4 டெஸ்டுகளில் பங்கேற்ற ஸ்மித், 774 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் அவர் தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். ஆஷஸ் தொடருக்கு முன்பு, 857 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் அவர் இருந்தார். 

அதேபோல ஐசிசி பந்துவீச்சுத் தரவரிசையில் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவர், ஆஷஸ் தொடரில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஐசிசி தரவரிசை: பேட்டிங்

1. ஸ்மித் - 937 புள்ளிகள்
2. விராட் கோலி - 903 புள்ளிகள்
3. கேன் வில்லியம்சன் - 878 புள்ளிகள்
4. புஜாரா - 825 புள்ளிகள்
5. ஹென்றி நிகோல்ஸ் - 749 புள்ளிகள்

ஐசிசி தரவரிசை: பந்துவீச்சு

1.பேட் கம்மின்ஸ் - 908 புள்ளிகள்
2.ரபாடா - 851 புள்ளிகள்
3.பும்ரா - 835 புள்ளிகள்
4.ஹோல்டர் - 814 புள்ளிகள்
5.பிளாண்டர் - 813 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT