செய்திகள்

இந்திய கிரிக்கெட் மகளிர் அணியில் சூதாட்ட சர்ச்சை: இருவர் மீது வழக்குப்பதிவு!

எழில்

இந்திய கிரிக்கெட்டில் சூதாட்டப் புகார் மீண்டும் தலை தூக்கியுள்ளது.

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (டிஎன்பிஎல்) 2019 சீசன் போட்டியில் சில வீரர்கள் மற்றும் 2 பயிற்சியாளர்களைச் சூதாட்டக்காரர்கள் அணுகி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட வலியுறுத்தியதாகவும், இதுதொடர்பாக வாட்ஸ் அப் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதகாவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் புகார்கள் தொடர்பாக பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் மகளிர் அணியும் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் போது சூதாட்டத் தரகர் ஒருவர், சூதாட்டம் தொடர்பாக இந்திய வீராங்கனையை அணுகியுள்ளார். குறிப்பிட்ட இந்திய வீராங்கனை இந்தத் தகவலை பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவிடம் புகார் அளித்தார். 

இதையடுத்து ராகேஷ் பாஃப்னா, ஜிதேந்திரா கோத்தாரி ஆகிய இருவரும் சூதாட்டம் தொடர்பாக இந்திய வீராங்கனையை அணுகியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் காவல் நிலையத்தில் அவ்விருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

SCROLL FOR NEXT