செய்திகள்

தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக 417 ரன்கள் எடுத்துள்ள இந்திய ஏ அணி!

இன்றைய ஆட்டத்தில் இந்திய ஏ அணி, 417 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது...

எழில்

இந்திய-தென்னாப்பிரிக்க ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 417 ரன்கள் எடுத்துள்ளது.

மைசூரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதல் நாள் முடிவில் இந்திய ஏ அணி, 74 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது. கருண் நாயர் 78, சஹா 36 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய ஏ அணி, 417 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. ஷுப்மன் கில் 92, கருண் நாயர் 78, சஹா 60, ஷிவம் டுபே 68, ஜலஜ் சக்ஸேனா 48 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. ஏ தரப்பில் முல்டர், பீடிட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT