செய்திகள்

டி20: புதிய சாதனை நிகழ்த்தியுள்ள விராட் கோலி!

நாளுக்கு நாள் புதிய புதிய சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்திய கேப்டன் விராட் கோலி...

எழில்

நாளுக்கு நாள் புதிய புதிய சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்திய கேப்டன் விராட் கோலி, நேற்றைய டி20 ஆட்டத்தின் மூலம் மற்றுமொரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் ஆடி வருகின்றன. தர்மசாலாவில் நடைபெறவிருந்த முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆட்டம் மொஹாலியில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலியின் விஸ்வரூபத்தால் தென்னாப்பிரிக்க அணி 7  விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியுற்றது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா 149/5 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களைக் குவித்து வென்றது. 3 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 52 பந்துகளில் 72 ரன்கள் எடுத்த விராட் கோலி, ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். 

இந்த ஆட்டத்துக்கு முன்பு, 65 இன்னிங்ஸில் 2369 ரன்கள் எடுத்திருந்தார் கோலி. 88 இன்னிங்ஸில், 2422 ரன்கள் எடுத்து அதிக டி20 ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றிருந்தார் ரோஹித் சர்மா. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா 12 ரன்களும் கோலி 72 ரன்களும் எடுத்தார்கள். இதனால் ரோஹித் சர்மாவைத் தாண்டி 2441 ரன்களுடன், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் கோலி. ரோஹித் சர்மா, 2434 ரன்களுடன் 2-ம் இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் 75 இன்னிங்ஸில் 2283 ரன்கள் எடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

காட்சிக்குப் பின்னால்... நித்யா மெனன்!

Return-தான்! Reject இல்ல! மெட்ரோ நிராகரிப்பு திட்டமிட்ட சதி! : நயினார் நாகேந்திரன் | BJP | DMK

SCROLL FOR NEXT