செய்திகள்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: சுஷில் குமார் தோல்வி

கஜகஸ்தானில் நடைபெற்றுவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவு முதல் சுற்றிலேயே இந்திய வீரர் சுஷில் குமார் தோல்வி அடைந்தார்.

DIN


கஜகஸ்தானில் நடைபெற்றுவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவு முதல் சுற்றிலேயே இந்திய வீரர் சுஷில் குமார் தோல்வி அடைந்தார்.
8 ஆண்டுகளுக்கு பிறகு அவர் உலக சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டார்.
நுர்-சுல்தான் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 74 கிலோ எடை ஃப்ரீஸ்டைல் பிரிவில் அஸர்பைஜான் வீரர் கத்ஷிமுரத் கத்ஷியேவிடம் 9-11 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றார் சுஷில்.
காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்றவரான சுமித் மாலிக் 125 கிலோ எடைப் பிரிவில் முதல் சுற்றில் பங்கேற்று, ஹங்கேரி வீரர் டேனியல் லிகேட்டியிடம் 0-2 என்ற புள்ளிக் கணக்கில் சரணடைந்தார். கொரிய வீரர் சுயி சங்ஜாவை 12-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீரர் பர்வீன் ராணா முன்னேறினார்.
எனினும், உக்ரைன் வீரர் லியுபோமியிரிடம் 0-8 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்ததை அடுத்து காலிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை பர்வீன் ராணா இழந்தார்.
இவர், 92 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார்.
70 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் இந்திய வீரர் கரன் மோர் 0-7 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீரர் இக்தியோர் நவ்ருúஸாவிடம் தோல்வி அடைந்தார்.
சுஷில் குமாரும், கரன் மோரும் மற்ற வீரர்களின் வெற்றி, தோல்வி அடிப்படையில் பதக்கம் வெல்லவும் ஒரு வாய்ப்புள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!

காங்கிரஸைத் துடைத்தெறிந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | Parasakthi

பாஜக - சிவசேனை கூட்டணிக்கு 90% வெற்றி வாய்ப்பு! பியூஷ் கோயல்

SCROLL FOR NEXT