கோப்புப்படம் 
செய்திகள்

நீயா, நானா? ரோஹித், கோலி இடையே நிலவும் சரியான போட்டி

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்க ரோஹித் சர்மாவுக்கு 8 ரன்கள் தேவைப்படுகிறது. 

DIN


சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்க ரோஹித் சர்மாவுக்கு 8 ரன்கள் தேவைப்படுகிறது. 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா முதலிடத்தில் இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி இருந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் ரோஹித் சர்மா வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதேசமயம், கேப்டன் விராட் கோலி இந்த ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 72 ரன்கள் எடுத்தார். 

இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ரோஹித் சர்மாவைப் பின்னுக்குத் தள்ளி விராட் கோலி முதலிடத்தைப் பிடித்தார்.

மேலும் படிக்க: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3-ஆவது டி20 ஆட்டம்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

இந்நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் இன்று பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் விராட் கோலி எடுக்கும் ரன்களைவிட கூடுதலாக 8 ரன்கள் எடுத்தாலே ரோஹித் சர்மா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறலாம்.

 இன்னிங்ஸ்ரன்கள்சராசரி
விராட் கோலி66244150.85
ரோஹித் சர்மா892434 32.45


இதேபோல், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானும் இந்த ஆட்டத்தில் 4 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் புதிய மைல்கல்லை எட்டவுள்ளார். ஷிகர் தவான் டி20 கிரிக்கெட்டில் இதுவரை மொத்தம் 6996 ரன்கள் குவித்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர் 4 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை எட்டும் 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். முன்னதாக, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகங்கையில் உள்ள நீதிமன்றங்களை மாற்றும் முயற்சியை கைவிட வலியுறுத்தல்

மான் வேட்டை: 5 போ் கைது

காரைக்குடி அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: ஒருவா் கைது

நாகா்கோவிலில் கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT