செய்திகள்

கொரிய ஓபன்: அரையிறுதியில் காஷ்யப்

கொரிய ஓபன் பாட்மிண்டன் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீரர் பாருபல்லி காஷ்யப் தகுதி பெற்றுள்ளார்.

DIN

கொரிய ஓபன் பாட்மிண்டன் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீரர் பாருபல்லி காஷ்யப் தகுதி பெற்றுள்ளார்.

டபிள்யுபிஎப் வேர்ல்ட் டூர் சூப்பர் 500 போட்டி இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, சாய்னா நெவால், சாய் பிரணீத், இரட்டையர் பிரிவு வீரர்கள் உள்ளிட்டோர் தோல்வியுற்று வெளியேறி விட்டனர்.

இந்திய தரப்பில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காஷ்யப் மட்டுமே போட்டியில் நீடித்து வருகிறார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் டென்மார்க்கின் ஜேன் ஓ ஜோர்கென்ஸனை 24-22, 21-8 என்ற கேம் கணக்கில் 47 நிமிடங்களில் வென்றார் காஷ்யப்.

முன்னாள் உலகின் இரண்டாம் நிலை வீரரான ஜேன் முதல் கேமில் மட்டுமே சவாலை ஏற்படுத்தினார்.

அரையிறுதியில் அவர் உலகின்நம்பர் ஒன் வீரர் ஜப்பானின் கென்டோ மொமடோவை எதிர்கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கப் பெண்ணே உள்ளிட்ட பல முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

முதியோருக்கு ரூ. 2,000; கல்விக் கடன் ரத்து; 3 சிலிண்டர்கள் இலவசம்! அதிமுக வாக்குறுதி!

அதிக உப்பு உடலுக்கு ஆபத்து!

தளராத அர்ப்பணிப்பு பயணம்! மண்டாடி விடியோவை வெளியிட்ட சூரி!

பிப். 13 - சேலத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT