முகப்பு
செய்திகள்

கரோனா: யுவ்ராஜ் சிங், ஹர்பஜன் சிங் நிதியுதவி

கரோனா நிவாரண நிதியாக கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங் ரூ. 50 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். அதேபோல ஹர்பஜன் சிங் 5000 குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார்.

Updated On : 6 ஏப்ரல், 2020 at 10:28 AM
பகிர்:

கரோனா நிவாரண நிதியாக கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங் ரூ. 50 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். அதேபோல ஹர்பஜன் சிங் 5000 குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 69,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 4,200 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா நிவாரண நிதியாக பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங் ரூ. 50 லட்சம் அளித்துள்ளார். அதேபோல மற்றொரு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் அவரது மனைவியும் நடிகையுமான கீதா பஸ்ராவும் 5,000 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கியுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.