செய்திகள்

ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி: பிசிசிஐ தரப்பு

DIN

ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த கொள்கை ரீதியில் மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக பிசிசிஐ தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று நிறைவடைகிறது. 53 நாள்கள் போட்டி நடைபெறுகிறது.

இந்த வருட ஐபிஎல் போட்டி குறித்து விவாதிப்பதற்காக ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.  ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் அணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை ஒவ்வொரு அணிக்கும் பிசிசிஐ அனுப்பியுள்ளது. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த கொள்கை ரீதியில் மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக பிசிசிஐ தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அனுமதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டியின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT