செய்திகள்

பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்: இலக்கை நோக்கிய இன்னிங்ஸில் இங்கிலாந்துக்கு நல்ல தொடக்கம்

DIN


பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 277 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்துக்கு நல்ல தொடக்கம் அமைந்துள்ளது.

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து 107 ரன்கள் என்ற முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து வெற்றிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கிய களமிறங்கிய இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களில் ரோரி பர்ன்ஸ் சற்று நேரம் தாக்குப்பிடித்து 10 ரன்களுக்கு அபாஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, சிப்ளேவுடன் இணைந்த கேப்டன் ஜோ ரூட் நிதானம் காட்டினார்.

4-ம் நாள் ஆட்டம் உணவு இடைவேளை வரை இருவரும் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டனர்.

4-ம் நாள் ஆட்டம் உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி 1 விக்கெட்டுகள் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. சிப்ளே 26 ரன்களுடனும், ரூட் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இங்கிலாந்து வெற்றிக்கு இன்னும் 222 ரன்கள் தேவை. பாகிஸ்தான் வெற்றிக்கு 9 விக்கெட்டுகள் தேவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா

கேரளம்: கடும் வெயிலால் இருவா் உயிரிழப்பு

கோடை வெப்பத்தை சமாளிக்க நடவடிக்கைகள்: ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இறுதிக்கு வந்தது மோகன் பகான்

SCROLL FOR NEXT