முகப்பு
செய்திகள்

ஐபிஎல்: கிறிஸ் வோக்ஸுக்குப் பதிலாகப் புதிய வீரரைத் தேர்வு செய்த தில்லி கேபிடல்ஸ் அணி

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸுக்குப் பதிலாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸுக்குப் பதிலாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிக் நோர்டியாவைத் தேர்வு செய்துள்ளது தில்லி கேபிடல்ஸ் அணி.

இங்கிலாந்து அணியில் தொடர்ந்து விளையாடுவதற்காக இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து கிறிஸ் வோக்ஸ் விலகினார். கடந்த வருட இறுதியில் நடைபெற்ற ஏலத்தில் தில்லி அணி ரூ. 1.50 கோடிக்கு வோக்ஸைத் தேர்வு செய்தது. 

26 வயது நோர்டியா, கடந்த வருடம் ரூ. 20 லட்சத்துக்கு கொல்கத்தா அணிக்குத் தேர்வானார். எனினும் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார். நோர்டியா, இதுவரை 6 டெஸ்டுகள், 7 ஒருநாள், 3 டி20 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

Advertisement

தில்லி கேபிடல்ஸ் அணியில் உள்ள ரபாடா, இஷாந்த் சர்மா, கீமோ பால், மோஹித் சர்மா ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களுடன் நோர்டியா இணைந்துள்ளார். 

நோர்டியா, இந்த வருட ஐபிஎல் போட்டியில் விளையாடும் 11-வது தென் ஆப்பிரிக்க வீரர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments