முதல் நாளிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி: ஹைலைட்ஸ் விடியோ
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டின் முதல் நாளன்று இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து அணி. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 2-வது டெஸ்ட் டிரா ஆனது. 3-வது டெஸ்ட் செளதாம்ப்டனில் நடைபெறுகிறது.
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் 2010-க்குப் பிறகு டெஸ்ட் தொடரில் தோற்றதில்லை. கடந்த இரு இங்கிலாந்துச் சுற்றுப்பயணங்களிலும் ஆறு டெஸ்டுகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 3 டெஸ்டுகளில் வெற்றி பெற்று 3 டெஸ்டுகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால் கடைசி டெஸ்ட் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியில் சாம் கரணுக்குப் பதிலாக ஆர்ச்சர் இடம்பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணியில் மாற்றமில்லை.
முதல் இரு பகுதிகளில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. இதனால் 127 ரன்களில் முதல் நான்கு விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது. இதன்பிறகு கிராவ்லியும் பட்லரும் அருமையான கூட்டணி அமைத்தார்கள். கடைசி வரை இவர்களைப் பிரிக்க முடியாமல் போனது.
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்துள்ளது. கிராவ்லி 171, பட்லர் 87 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.