சச்சின் ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்: இந்திய வீராங்கனை
சச்சின் ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் போட்டியைப் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என்று...
ஐபிஎல் போட்டியிலிருந்து சச்சின் ஓய்வு பெற்ற பிறகு ஐபிஎல் போட்டியைப் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என்று இந்திய கிரிக்கெட் வீராங்கனை சுஷ்மா வர்மா கூறியுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக விளையாடியுள்ள சுஷ்மா, இதுவரை 1 டெஸ்ட், 38 ஒருநாள், 19 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சச்சின் பற்றி அவர் கூறியதாவது:
இப்போது நான் ஐபிஎல் ஆட்டங்களைப் பார்ப்பதில்லை. சச்சின் இடம்பெற்றிருந்தபோது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டங்களைப் பார்த்துள்ளேன். சச்சின் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். தர்மசாலாவில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட வந்தபோது சச்சின் விளையாடுவதைப் பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் அந்த ஆட்டத்தில் சச்சின் விளையாடவில்லை. அதற்குப் பிறகு ஐபிஎல் போட்டியைப் பார்க்கக் கூடாது என முடிவெடுத்தேன் என்றார்.