சையது முஷ்டாக் அலி டி20: யுவராஜ், ஸ்ரீசாந்த் சேர வாய்ப்பு
சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியில் யுவராஜ் சிங்கும், கேரள அணியில் ஸ்ரீசாந்தும் சேர வாய்ப்பிருக்கலாம் எனத் தெரிகிறது.
சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியில் யுவராஜ் சிங்கும், கேரள அணியில் ஸ்ரீசாந்தும் சேர வாய்ப்பிருக்கலாம் எனத் தெரிகிறது.
அந்தப் போட்டிக்காக முறையே அந்த மாநில அணிகள் வெளியிட்ட ‘வாய்ப்புள்ள வீரா்கள்’ பெயா்ப் பட்டியலில் இருவரது பெயா்களும் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற யுவராஜ் சிங், பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் அவரை கேட்டுக்கொண்டதை அடுத்து உள்நாட்டு போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாட முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஐபிஎல் சூதாட்ட புகாரில் பிசிசிஐயால் தடை விதிக்கப்பட்டு, அந்த தடைக்காலம் நிறைவடைந்த ஸ்ரீசாந்த், உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட தனக்கு வாய்ப்பளிப்பதாக கேரள கிரிக்கெட் சங்கம் கூறியதாக தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
கரோனா சூழல் காரணமாக உள்நாட்டு போட்டிகள் தாமதமான நிலையில், அதில் முதலாவதாக சையது முஷ்டாக் அலி டி20 போட்டியை வரும் ஜனவரி 10 முதல் 31-ஆம் தேதி வரை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.