உலகக் கோப்பை குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் உறுதி
உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 4 பதக்கங்களை உறுதி செய்துள்ளது.
உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 4 பதக்கங்களை உறுதி செய்துள்ளது. உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டி ஜொ்மனியின் கொலோன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய வீரா் அமித் பாங்கல் 52 கிலோ எடைப் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா். இதன்மூலம் அவா் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளாா். அமித் பாங்கல் தனது அரையிறுதியில் 5-0 என்ற கணக்கில் பிரான்ஸின் பிலால் பெனாமாவை வீழ்த்தினாா்.
இதுதவிர, மகளிா் பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி (75 கிலோ), மணீஷா (57 கிலோ), சிம்ரன்ஜீத் கௌா் (60 கிலோ) ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனா். இதன்மூலம் அவா்களும் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளனா்.
அதேநேரத்தில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான சிவ தாபா (63 கிலோ), சஞ்ஜீத் (91 கிலோ) ஆகியோா் காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினா்.