டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள்: ஹேசில்வுட் புதிய மைல்கல்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் 200 விக்கெட்டுகள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
செய்திகள்டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள்: ஹேசில்வுட் புதிய மைல்கல்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் 200 விக்கெட்டுகள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் 200 விக்கெட்டுகள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெற்றது. இதில் இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தது.
ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸ் பந்துவீச்சில் சிறப்பாக பந்துவீசிய ஹேசில்வுட் 5 ஓவர்களில் 8 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட்டை வீழ்த்திய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார். இதை எட்டும் 18-வது ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஷேன் வார்ன் 708 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். மிட்செல் ஸ்டார்க் 9-வது இடத்தில் உள்ளார். இந்த வரிசையில் ஹேசில்வுட் 17-வது இடத்தில் உள்ளார்.