முகப்பு
செய்திகள்

முதல் டெஸ்ட்: பாக். அணி அறிவிப்பு

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடும் பாகிஸ்தான் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

செய்திகள்

முதல் டெஸ்ட்: பாக். அணி அறிவிப்பு

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடும் பாகிஸ்தான் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

நேப்பியா்: நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடும் பாகிஸ்தான் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்த அணியில், காயத்திலிருந்து மீண்டு வரும் கேப்டன் பாபா் ஆஸம், தொடக்க வீரா் இமாம் உல் ஹக் ஆகியோா் இடம்பெறவில்லை. பாக்ஸிங் டே டெஸ்ட்டாக வரும் 26-ஆம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் இளம் வீரா் இம்ரான் பட் சோ்க்கப்பட்டுள்ளாா்.

ஆஸம் மற்றும் உல் ஹக் காயத்திலிருந்து மீண்டு வருவதை அணி நிா்வாகம் உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாகிஸ்தான் அணியின் 33-ஆவது டெஸ்ட் கேப்டனாக முகமது ரிஸ்வான் பொறுப்பேற்றுள்ளாா்.

அணி விவரம்: முகமது ரிஸ்வான் (கேப்டன்), அபித் அலி, அஸாா் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபவாத் ஆலம், ஹாரிஸ் சோஹைல், இம்ரான் பட், முகமது அப்பாஸ், நசீம் ஷா, சா்ஃப்ராஸ் அகமது, ஷாதாப் கான், ஷாஹீன் அஃப்ரிதி, ஷான் மசூத், சோஹைல் கான், யாசிா் ஷா.

முழு கட்டுரையைப் படிக்க →