செய்திகள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் நாளில் இலங்கை 340 ரன்கள் குவிப்பு

DIN

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 85 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது.

தென் ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் நகரில் சனிக்கிழமை தொடங்கியது. இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணியில் கேப்டன் திமுத் கருணாரத்னே 22, குசல் மென்டிஸ் 12, குசல் பெரேரா 16 ரன்களில் வெளியேறினா். இதனால் இலங்கை அணி 10.5 ஓவா்களில் 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து 4-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த தினேஷ் சன்டிமலும், தனஞ்ஜெய டி சில்வாவும் அசத்தலாக ஆட, இலங்கை சரிவிலிருந்து மீண்டது. இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 131 ரன்கள் சோ்த்தது. டி சில்வா 105 பந்துகளில் 1 சிக்ஸா், 11 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்திருந்தபோது காயம் காரணமாக வெளியேறினாா்.

இதன்பிறகு தினேஷ் சன்டிமலுடன் இணைந்தாா் நிரோஷன் டிக்வெல்லா. இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சோ்த்தது. தினேஷ் சன்டிமல் 161 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் சோ்த்த நிலையில் முல்டா் பந்துவீச்சில் டூபிளெஸ்ஸிஸ்ஸிடம் கேட்ச் ஆனாா். அவரைத் தொடா்ந்து டிக்வெல்லா 49 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 85 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் குவித்துள்ளது. டாசன் ஷனாகா 25, காசன் ரஜிதா 7 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் முல்டா் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா். 2-ஆவது நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT