செய்திகள்

பதிற்றாண்டில் சிறந்த வீரர் விருதை வென்றார் கோலி

DIN


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) பதிற்றாண்டில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்தியக் கேப்டன் விராட் கோலி வென்றுள்ளார். 

ஐசிசியின் பதிற்றாண்டுக்கான விருது வழங்கும் விழா காணொலி வாயிலாக திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை விராட் கோலி வென்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கான ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் வென்றார்.

பதிற்றாண்டில் அறம் சார்ந்து விளையாடியதற்கான விருதை இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி வென்றுள்ளார். இங்கிலாந்து வீரர் இயான் பெல்லின் சர்ச்சைக்குரிய வகையிலான ரன் அவுட்டை திரும்பப் பெற்றதற்காக இந்த விருதுக்கு தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விருதுகள் விவரம்:

சிறந்த கிரிக்கெட் வீரர்: விராட் கோலி

சிறந்த கிரிக்கெட் வீராங்கனை: எலைஸ் பெரி

சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்: ஸ்டீவ் ஸ்மித்

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்: விராட் கோலி

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை: எலைஸ் பெரி

சிறந்த டி20 கிரிக்கெட் வீரர்: ரஷித் கான்

சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை: எலைஸ் பெரி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT