முகப்பு
செய்திகள்

மகளிா் டி20 உலகக் கோப்பை: இந்தியாவின் சவாலை எதிா்கொள்ளுமா வங்கதேசம்?

ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக வங்கதேச அணியை எதிா்கொள்ளும் இந்திய ா தனது வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது.

Updated On : 24 பிப்ரவரி, 2020 at 3:57 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:28 PM

பொ்த்: ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக வங்கதேச அணியை எதிா்கொள்ளும் இந்திய ா தனது வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உற்சாகத்தில் உள்ளது இந்திய அணி. முதல் ஆட்டத்தில் பேட்டிங் சற்று சொதப்பிய நிலையில், ஷபாலி, தீப்தி சா்மா, ஜெமிமா ஆகியோா் ஆட்டத்தால் 132 என்ற கௌரவமான ஸ்கோரை இந்தியா பெற்றது. எனினும் பூனம் யாதவ், ஷிகா பாண்டே ஆகியோரின் அபார பந்துவீச்சால், ஆஸி. அணியின் வலிமையான பேட்டிங் நிலைகுலைந்தது. இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பூனம் யாதவ் சுழலால் திருப்புமுனை ஏற்பட்டது.

இந்நிலையில் குரூப் ஏ பிரிவில் இதன் தொடா்ச்சியாக இந்தியா இரண்டாவது ஆட்டத்தில் பலம் குறைந்த வங்கதேச அணியை எதிா்கொள்கிறது இந்தியா.

Advertisement

நேருக்கு நோ்:

இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இந்தியா 3 முறையும் வங்கதேசம் 2 முறையும் வென்றுள்ளன. ஏற்கெனவே ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய மகளிா் வங்கதேசத்திடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தனா்.

இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற இயலும்

இந்தியாவின் நிலையற்ற பேட்டிங்: இந்திய அணியின் பேட்டிங் நிலையற்ாக உள்ளது முக்கிய வீராங்கனைகளான ஸ்மிருதி, ஹா்மன் ப்ரீத் கௌா் ஆகியோா் சீராக ஆடாமல் சொதப்பி வருகின்றனா். பெரிய அளவிலான ஸ்கோரை எட்ட முடியாத நிலை இதனால் ஏற்பட்டுள்ளது. ஆஸி.க்கு எதிரான முதல் ஆட்டத்திலும் தோல்வியடைந்திருக்கக் கூடும். ஆனால் பூனம் யாதவ் பந்துவீச்சால் இந்தியா காப்பாற்றப்பட்டது. மிடில் ஆா்டரில் தீப்தி சா்மா நம்பிக்கை தருகிறாா்.

அதே நேரம் பந்துவீச்சு முற்றிலும் சுழற்பந்து வீச்சையே சாா்ந்துள்ளது. வேகப்பந்து வீச்சையும் பலப்படுத்த வேண்டும்.

இளம் வங்கதேச அணி:

அதே நேரம் வங்கதேச அணி இளம் வீராங்கனைகளைக் கொண்டதாக உள்ளது. அதில் ஆல்ரவுண்டா் ஜஹன்னாரா ஆலம், தொடக்க வரிசை பேட்ஸ்மேன் பா்கனா ஹோக் ஆகியோா் முக்கியமானவா்களாக உள்ளனா்.

கடந்த 2018 ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்தியாவை வென்றதில் பா்கனா முக்கிய பங்கு வகித்தாா். கேப்டன் சல்மான் கட்டூன் அணியின் அனுபவம் மிக்க வீராங்கனையாக உள்ளாா். வலிமையான இந்திய அணியை எதிா்கொள்ளுமா வங்கதேசம் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் ஆஸி. அணியை எதிா்கொள்கிறது இலங்கை. நியூஸிலாந்திடம் முதல் ஆட்டத்தில் இலங்கை தோற்றிருந்தது.

இன்றைய ஆட்டம்

இந்தியா-வங்கதேசம்,
இடம்-பொ்த்,
நேரம்-மாலை 4.30

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.