செய்திகள்

மும்பைக்கு எதிரான ரஞ்சி ஆட்டம்: மயங்க் அகர்வாலுக்கு ஓய்வு

முக்கியமான இந்த ஆட்டத்தில் மயங்க் அகர்வாலுக்கு ஓய்வு அளிக்கும்படி கர்நாடக அணிக்கு பிசிசிஐ கட்டளையிட்டுள்ளது.

எழில்

ஜனவரி 3 அன்று நடைபெறவுள்ள ரஞ்சி ஆட்டத்தில் பலம் வாய்ந்த அணிகளான மும்பை - கர்நாடகா மோதுகின்றன. இதுவரை கர்நாடக அணி 3 ஆட்டங்களில் 1 வெற்றியும் மும்பை அணி 2 ஆட்டங்களில் 1 வெற்றி 1 தோல்வியும் பெற்றுள்ளன. கர்நாடகா 10 புள்ளிகளும் மும்பை 6 புள்ளிகளும் சேர்த்துள்ளன.

முக்கியமான இந்த ஆட்டத்தில் மயங்க் அகர்வாலுக்கு ஓய்வு அளிக்கும்படி கர்நாடக அணிக்கு பிசிசிஐ கட்டளையிட்டுள்ளது. எனினும் மற்றொரு டெஸ்ட் வீரரான ரஹானே, பிரித்வி ஷாவுடன் இணைந்து அந்த ரஞ்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான இந்திய ஏ அணியில் மயங்க் அகர்வால் இடம்பெற்றுள்ளதால் அவர் ஓய்வு எடுக்கும்படி பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. இந்திய ஏ அணி ஜனவரி 10 அன்று நியூஸிலாந்துக்குச் செல்லவுள்ளது. ரஹானேவும் இந்திய ஏ அணியில் இடம்பெற்றாலும் அவர் ஆடுகிற ஆட்டம் பிப்ரவரியில் தான் நடைபெறுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தோ்வு முடிவுகள் வெளியீடு

ராமேசுவரத்தில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுக, அமமுகவினா் மரியாதை

SCROLL FOR NEXT