முகப்பு
செய்திகள்

ரஞ்சிப் போட்டி: முதல் இன்னிங்ஸில் தமிழக அணி முன்னிலை

கான்பூரில் நடைபெற்று வரும் ரஞ்சி ஆட்டத்தில் உத்தரப் பிரதேச அணிக்கு எதிராகத் தமிழக அணி 5 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Updated On : 6 ஜனவரி, 2020 at 11:04 AM
பகிர்:

கான்பூரில் நடைபெற்று வரும் ரஞ்சி ஆட்டத்தில் உத்தரப் பிரதேச அணிக்கு எதிராகத் தமிழக அணி 5 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் 3-ம் நாளின் இறுதியில் உத்தரப் பிரதேச அணி, 65.6 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இதனால் இரு அணிகளில் எந்த அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் என்கிற பரபரப்பு ஏற்பட்டது. 

இன்று ஆட்டம் தொடர்ந்தபோது அங்கித் ராஜ்புத்தை போல்ட் செய்தார் நடராஜன். இதனால் உத்தரப் பிரதேச அணி 175 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 5 ரன்கள் முன்னிலை பெற்றது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.