செய்திகள்

2-0 என டி20 தொடரை எளிதாக வென்ற இந்தியா! (ஹைலைட்ஸ் விடியோ)

தொடர் நாயகனாக நவ்தீப் சைனியும், ஆட்ட நாயகனாக ஷர்துல் தாக்குரும் தேர்வு செய்யப்பட்டனர். 

எழில்

இந்தியா - இலங்கை ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் குவாஹாட்டி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்தூரில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

தொடரைக் கைப்பற்றப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஆட்டம் புணேயில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்தியா 201/6 ரன்களை குவித்தது. ராகுல், 1 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 54 ரன்களை விளாசினார். தவன் 1 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். 4 பவுண்டரியுடன் 18 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார் மணிஷ் பாண்டே. ஷர்துல் தாக்குர் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 8 பந்துகளில் 22 ரன்களை விளாசி இந்திய அணி 200 ரன்களைத் தாண்ட முக்கியக் காரணமாக இருந்தார். இரண்டாவதாக ஆடிய இலங்கை அணி 123 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகியது. இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய நவ்தீப் சைனி 3-28, சர்துல் 2-19, வாஷிங்டன் சுந்தர் 2-37 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தை 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-0 என கைப்பற்றியது இந்தியா. தொடர் நாயகனாக நவ்தீப் சைனியும், ஆட்ட நாயகனாக ஷர்துல் தாக்குரும் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT