செய்திகள்

டி20 புதிய தரவரிசை: விராட் கோலி, தவன் முன்னேற்றம்

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பும்ரா 39-ம் இடத்தில் உள்ளார். ரஷித் கான் முதலிடம் பிடித்துள்ளார். 

எழில்

இன்று வெளியிடப்பட்டுள்ள டி20 தரவரிசையில் இந்திய வீரர்கள் விராட் கோலி, ஷிகர் தவன் முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.

இந்தியா - இலங்கை ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் குவாஹாட்டி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்தூரில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

தொடரைக் கைப்பற்றப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஆட்டம் புணேயில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்தியா 201/6 ரன்களை குவித்தது. இரண்டாவதாக ஆடிய இலங்கை அணி 123 ரன்களுக்கும் ஆல் அவுட்டாகியது. இந்தியத் தரப்பில் அபாரமாகப் பந்து வீசிய நவ்தீப் சைனி 3-28, சர்துல் 2-19, வாஷிங்டன் சுந்தர் 2-37 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய ராகுல், 26 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று, டி20 தரவரிசையில் தனது 6-வது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் முதலிடத்தில் உள்ள கோலி, 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டி20 தொடரில் 32 மற்றும் 52 என இரு ஆட்டங்களிலும் ரன்கள் எடுத்த தவான், 15-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். பேட்ஸ்மேனுக்கான தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் அஸாம் முதலிடத்தில் உள்ளார். 

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பும்ரா 39-ம் இடத்தில் உள்ளார். ரஷித் கான் முதலிடம் பிடித்துள்ளார். 

அணிகளுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி, 5-ம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT