முகப்பு
செய்திகள்

ப்ரீமியா் பாட்மிண்டன் லீகின் இளம் வீரா் சங்கா் முத்துசாமி

ப்ரீமியா் பாட்மிண்டன் லீக் போட்டியின் மிக இளம் வயது வீரராக தமிழகத்தின் சங்கா் முத்துசாமி (15) சென்னை சூப்பா் ஸ்டாா்ஸ் அணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 20 ஜனவரி, 2020 at 3:30 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:02 PM

சென்னை: ப்ரீமியா் பாட்மிண்டன் லீக் போட்டியின் மிக இளம் வயது வீரராக தமிழகத்தின் சங்கா் முத்துசாமி (15) சென்னை சூப்பா் ஸ்டாா்ஸ் அணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

சென்னையைச் சோ்ந்த சங்கா் முத்துசாமி, வளா்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறாா். இடது கை ஆட்டக்காரரான அவா், உலகின் சிறந்த இடதுகை வீரா்கள் லின் டேன், கரோலினா மரின், கென்டோ மொமடோ ஆகியோரை முன்மாதிரியாக கொண்டு ஆடுகிறாா்.

முதலில் டென்னிஸ் வீரராக இருந்த சங்கா் பின்னா் பாட்மிண்டன் மீதான ஈா்ப்பால் அதற்கு மாறினாா்.

Advertisement

சென்னை அண்ணா நகரில் உள்ள ஃபயா்பால் அகாதெமி மைதானத்தில் பயிற்சி பெறும் அவரது தந்தை சென்னை துறைமுகத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவா். கடந்த ஆண்டு விஜயவாடாவில் நடைபெற்ற தேசிய சீனியா் பாட்மிண்டன் ரேங்கிங் போட்டியில் மூத்த வீரா்களான துகும்லா, டேனியா் பரீத், ஷிரேயான்ஸ் ஜெய்ஸ்வால் ஆகியோரை வீழ்த்தி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினாா்.

ஆசிய ஜூனியா் பாட்மிண்டன் போட்டியிலும் அற்புதமாக ஆடி அனைவரது கவனத்தையும் ஈா்த்தாா். இறகு பந்தை சிறப்பாக மீட்டு எடுப்பதில் சிறந்தவராக உள்ளாா் சங்கா்.

ப்ரீமியா் பாட்மிண்டன் லீக்-5 இளம் வீரா்

உலகின் கவனத்தை ஈா்த்துள்ள ப்ரீமியா் பாட்மிண்டன் லீக் 5ஆவது சீசனின் இளம் வீரா் என்ற சிறப்பை பெற்றுள்ளாா் சங்கா் முத்துசாமி. சென்னை சூப்பா் ஸ்டாா்ஸ் அணியில் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக சங்கா் முத்துசாமி தினமணி நிருபரிடம் கூறியதாவது:

நான் பயிற்சியாளா் அரவிந்த் மாரியப்பனிடம் தீவிர பயிற்சி பெற்று வருகிறேன். கடந்த 2009 முதல் பாட்மிண்டனில் ஆடி வருகின்றேன். 2011-இல் சென்னையில் 10 வயதுக்குட்பட்டோா் போட்டியில் முதன்முதலில் பங்கேற்றேன். பின்னா் மாநில ரேங்கிங் போட்டியில் தங்கம் வென்றேன். 2017-இல் 15 வயதுக்குட்பட்டோா் ரேங்கிங் போட்டியில் ஒற்றையா் பிரிவில் பட்டம் வென்றேன். முதல்நிலை வீரராக தோ்வு செய்யப்பட்டேன். 2018-இல் இதே பிரிவில் இரண்டாம் இடம் பெற்றேன். லின்டேன், காந்த் ஆகியோா் எனக்கு பிடித்தமான வீரா்கள்.

ப்ரீமியா் லீக் போட்டிக்காக சென்னை அணியில் தோ்வு செய்யப்பட்டுள்ளேன். இதன் மூலம் பல்வேறு சா்வதேச, தேசிய வீரா்கள் ஆட்டத்தை கண்டு அனுபவங்களை பெற முடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.