செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: நியூஸிலாந்து அணி அறிவிப்பு!

3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடருக்கான நியூஸிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது...

எழில்

இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. இதுவரை நடைபெற்ற 3 டி20 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரை வென்றுள்ளது.

இந்நிலையில் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடருக்கான நியூஸிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக நியூஸிலாந்தின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களான டிரெண்ட் போல்ட், மேட் ஹென்றி, ஃபெர்குசன் ஆகிய வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு முதல்முறையாக நியூஸிலாந்து அணி ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. 

நியூஸிலாந்து அணி

கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஹமிஷ் பென்னட், டாம் ப்ளண்டெல், காலின் டி கிராண்ட்ஹோம், மார்டின் கப்தில், கைல் ஜேமிசன், ஸ்காட் குஜ்ஜிலிஜின், டாம் லதம், ஜிம்மி நீஷம், ஹென்றி நிகோல்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி (முதல் ஒருநாள்), டிம் சோதி, ராஸ் டெய்லர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT