செய்திகள்

பல சாதனைகளைப் படைத்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் காலமானார்!

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஜாம்பவனாகத் திகழ்ந்த சர் எவர்டன் வீக்ஸ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. 

1948-ல் 22 வயதில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார் எவர்டன் வீக்ஸ். 48 டெஸ்டுகள் விளையாடி 4455 ரன்கள் எடுத்தார். சராசரி - 58.61. 1948-ல் தொடர்ச்சியாக 5 டெஸ்ட் சதங்கள் அடித்து உலக சாதனை நிகழ்த்தினார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்களுக்கும் அதிகமாக எடுத்தவர்களில் அதிக பேட்டிங் சராசரி வைத்துள்ள முதல் 10 வீரர்களில் வீக்ஸும் ஒருவர். இவரை விடவும் நான்கு பேட்ஸ்மேன்கள் மட்டுமே அதிக பேட்டிங் சராசரியைக் கொண்டுள்ளார்கள். 152 முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி 12,010 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 55.34. அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 304 ரன்கள் எடுத்துள்ளார்.

சர் பிராங்க் வோரல், சர் கிளைட் வால்காட், வீக்ஸ் ஆகியோரை மூன்று டபிள்யூக்கள் என்று குறிப்பிட்டது கிரிக்கெட் உலகம். மூன்று பேரும் பேட்டிங் திறமைகளுக்காகப் புகழப்பட்டார்கள். மற்ற இருவரும் முன்பே இறந்துவிட்டார்கள். 12 இன்னிங்ஸில் 1000 டெஸ்ட் ரன்களை எடுத்தவர் வீக்ஸ். பிராட்மேனை விடவும் ஒரு இன்னிங்ஸ் குறைவு. இவ்வளவு குறைந்த இன்னிங்ஸில் முதல் 1000 டெஸ்ட் ரன்களை எடுத்தவர்கள் வீக்ஸும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹெர்பெரட் சட்கிளிஃப்பும் தான். 

வீக்ஸின் மறைவுக்கு கிரிக்கெட் உலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோதிப்பது காலமாக இருந்தாலும் சாதிப்பது நீங்களாக இருங்கள்! தர்ஷா குப்தா...

பாஜக மீது கர்நாடக முதல்வர் காட்டம்!

பீச் வாலிபால் விளையாடும் இந்திய வீரர்கள்!

மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம்: அமித் ஷா ஆலோசனை

பாடப் புத்தகங்களில் இந்தியாவுக்கு பதிலாக பாரத்..? என்சிஇஆா்டி விளக்கம்

SCROLL FOR NEXT