டாஸ் நிகழ்வின்போது சீன் வில்லியம்ஸ் - மொர்டசா 
செய்திகள்

கரோனாவிலிருந்து மீண்டார் பிரபல வங்கதேச வீரர்

வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரஃப் மொர்டசா, கரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளார்...

DIN

வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரஃப் மொர்டசா, கரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளார். 

கடந்த பிப்ரவரி மாதம், ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடருக்குப் பிறகு கேப்டன் பதவியிலிருந்து மொர்டசா விலகினார். இதனால் ஓய்வு அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேச அணிக்காக 36 டெஸ்டுகள், 220 ஒருநாள், 54 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

கடந்த மாதம் மொர்டசாவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் வீட்டில் சுயமாகத் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் கரோனா வைரஸின் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதுபற்றி கூறியதாவது:

பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. எனக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. எனக்காக அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி. எனினும் கரோனா உறுதியாகி இரு வாரங்கள் ஆன பின்பும் அதன் பாதிப்பிலிருந்து எனது மனைவி மீளவில்லை. ஆனால் அவர் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். நான் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டேன். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையுடன் இருங்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் பாமக மனு

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

SCROLL FOR NEXT